• Latest News

    November 22, 2017

    ஏறாவூர் நகரை முன்னேற்ற முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பக்கபலமாக இருக்கவேண்டும் - செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

    - பைஷல் இஸ்மாயில் -

    ஏறாவூர் நகர சபைப் பிரிவின் கல்வி, கலாச்சாரம், சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்கி நகரை முன்னேற்றுவதற்கான சகல திட்டங்களுக்கும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக பக்கபலமாக இருக்கவேண்டும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

    ஏறாவூர் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கும், புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) நகர சபையில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    நகரை முழுமையாக பாதுகாக்கின்ற பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கின்றன. இதை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் எமது சுகாதார வாழ்க்கைக்கு ஏதுவாக அமையும். அதுமாத்திரமல்லாமல் டெங்கு போன்ற பாரிய உயிராபத்துக்களை விளைவிக்கக் கூடிய இடங்களை அடையாளம் கண்டு அந்த இடங்களை முற்று முழுதாக அழித்து எமது நகரை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் எம்மையும் எம் சமூகத்துக்கு வரக்கூடி உயிராபத்துக்களை தடுக்கமுடியும் என்றார்.

    ஏறாவூர் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றினைந்து செயற்படவுள்ளதாகவும், அதற்காக தாங்கள் 24 மணிநேரமும் தயாராக இருப்போம் என்றும் இச்சந்திப்பில் இனக்கம் தெரிவித்த இதேவேளை ஏறாவூர் முஸ்லிம் நிறுவனங்களின் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏறாவூர் நகரை முன்னேற்ற முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பக்கபலமாக இருக்கவேண்டும் - செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top