• Latest News

    November 24, 2017

    சம்பந்தனின் காலைப் பிடிக்கிறார் வை.எம். ஹனீபா

    (முஹம்மது காசிம்) 
    சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்குமாறு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா கடந்த 21.11.2017 மாலை சாய்ந்தமருது கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  தெரிவித்தார். வை.எம் ஹனீபா தனது ஆரம்ப காலங்களில் பேரினவாத கட்சி ஒன்றின் பிரதிநிதியின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்டே தனது வயிற்றுப் பிழைப்பை நடத்தியதோடு அதுவே அவர் சொத்து செல்வங்களை சேகரிப்பதற்கான உபாயமாகவும் காணப்பட்டது. அதற்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காகவே பேரினவாத கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துள்ளார்.

     சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் கறுப்புக் கண்ணாடி ஊடான பார்வையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே சாய்ந்தமருது மக்களுக்கு துரோகமிழைத்த கட்சியாக பார்க்கப்படுகின்றது. ஆதலால் இனவாதம் சலங்கை கட்டி ஆடும் இக்காலத்தில் பேரினவாதக் கட்சிகள் காவி உடைக்கு தலைசாய்க்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு அரணாக முஸ்லிம் கட்சியே இருக்கும் என்றவகையில் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஆசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி போன்ற முஸ்லிம் கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்குமாறு வை.எம்.ஹனீபா கூறியிருக்கலாம். ஆனால் பணத்திற்கும் சுகபோகத்துக்கும் சோரம் போனவர்களால் எப்படி முஸ்லிம் சமூகம் தொடர்பில் சிந்தித்து பேசமுடியும்.

    சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஊர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இப்பிரிவினைக்கான காரணகர்த்தா இந்த வை.எம்.ஹனீபா என்பதை எமது சாய்ந்தமருது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அன்று சாய்ந்தமருது கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பதவியை வை.எம். ஹனீபாவும் கல்முனை கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பதவியை மீராசாஹிபும் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டு தனியாக இருந்த சாய்ந்தமருது கிராம சபையினை கல்முனையோடு இணைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தார்கள்.

    ஆனால் இப்போது சாய்ந்தமருது மக்கள் மத்தியில் பிரதேச வாதத்தை வளர்த்து பிரிவினையை ஏற்படுத்த பெற்றோல் ஊற்றுகிறார் வை.எம். ஹனீபா. இதனால் இன்று எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பிரதேசவாதம் தலைக்கடித்துள்ளது. 

    சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை தனியாக பிரிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளை வழிநடத்திய சம்பந்தனின் காலைப் பிடிக்கிறார் வை.எம். ஹனீபா. அன்று மாளிகைக் காட்டில் தமிழர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும், சாய்ந்தமருது சந்தையில் குண்டுவெடிப்பதற்கும், கல்முனை பொலிஸ் நிலையத்தில் இருந்த முஸ்லிம்களை சுட்டுக் கொல்வதற்கும், இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம், இவற்றுக்கெல்லாம் பின்னணியிலிருந்த சம்பந்தனை நாடுவதன் ஊடாக கல்முனை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு சாய்ந்தமருதை தனியாக பிரிப்பதற்கு துணை நிற்பார் என்று நினைத்து செயற்படுகிறார் வை.எம். ஹனீபா. 

     வை.எம். ஹனீபாவே, மறுமையை பயந்து கொள்ளுங்கள், சுயநலன்களுக்காக சமூகத்தை கூறுபோடாதீர்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்பந்தனின் காலைப் பிடிக்கிறார் வை.எம். ஹனீபா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top