• Latest News

    November 24, 2017

    பள்ளிவாசல் விரிவாக்கத்திற்க்கான காணியை கொள்வனவு செய்வதற்க்கு நன்கொடை நிதி உதவி கோரல் - 2017

    அஸ்ஸலாமு அலைக்கும்

    இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு.

    பள்ளிவாசல் விரிவாக்கத்திற்க்கான காணியை கொள்வனவு செய்வதற்க்கு நன்கொடை நிதி உதவி கோரல் - 2017

    எமது இஸ்வா பள்ளிவாசலில் தூய குர்ஆன், சுன்னா அடிப்படையில் இஸ்லாத்தை மக்களுக்கு எற்றி வைத்தல் என்ற தூய நோக்கில் நாம் அல்லாஹ்வின் உதவியுடன் பல்வேறு தஃவா செயற்பாடுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.  ஆனால் எமது தஃவா நிகழ்வுக்கு அதிக சகோதரர்கள் வருகை தருகின்றமையால் போதியளவு இடம் பாரிய பற்றாக்குறையாக உள்ளது என்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

    எமது பள்ளிவாசல் மற்றும் குர்ஆன் மணன (ஹிப்ழ்) மத்ரஸாவின் இடப்பற்றாக்குறையை நிவர்த்திக்க வேண்டுமாயின் அருகில் உள்ள காணியை  வாங்கி விரிவாக்க வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அக்காணியின் மொத்த பெறுமதி ரூபா. 2500 ,000.00 (இருபத்தைந்து இலட்சம்) ஆகும்.

    இதனை நாம் செயற்படுத்த இக்காணியை 500 நபர்களுக்கான பங்குகளாக பிரித்து, அவர்களின் நன்கொடை மூலம் கொள்வனவு செய்வதற்க்கு திட்டமிட்டுள்ளோம். 

    ஒரு பங்கின் பெறுமதி ரூபா .5000.00

    தாங்கள் வாங்கி வக்பு செய்யும் ஓரு பங்கின் இடப்பரப்பு - நீளம் 11.4 அடியும், 0.9 அங்குல அகலமுமாகும்.

    எனவே முடியுமான சகோதரர்களும் சகோதரிகளும் அல்லாஹ்வின் மாளிகைக்கான காணியை வாங்க உதவுமாறு அன்பாய் வேண்டுகிறேம் .

    தங்கள் நன்கொடைகளை வழங்க இஸ்வா காரியாலயத்துடன் தொடர்பு கெள்ளவும்.  அல்லது இதற்க்கென பிரத்தியேகமாக திறக்கப்பட்டுள்ள  பின்வரும் வங்கி கணக்கில்  நோரடியாக வைப்பு செய்ய முடியும்,

    Islamic Social Wefare Awakening Association( ISWAA)
    அமானா வங்கி( Amana Bank) - 
    நிந்தவூர் கிளை(Nintavur Branch  ) 
    கணக்கு இல. 001- 0309033-001.

    அல்லது

     Islamic Social Wefare Awakening Association( ISWAA)
    மக்கள் வங்கி( Peoples Bank) - 
    நிந்தவூர் கிளை(Nintavur Branch  ) 
    கணக்கு இல. 296-1001-30000-517

    இவ்வண்ணம் 
    இஸ்வா ஜும்மா பள்ளிவாசல்
    நிந்தவூர், இலங்கை.
    தொடர்புகளுக்கு -  
    தலைவர் - 0776526037.
    உப தலைவர் - 0771506065.
    செயலாளர் - 0771617291.
    ஈ- மெயில் - iswaasso@yahoo.com.
    இனையதளம் - www.iswaasso.com.
    சமூக வளைத்தளம் - iswaassontr
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பள்ளிவாசல் விரிவாக்கத்திற்க்கான காணியை கொள்வனவு செய்வதற்க்கு நன்கொடை நிதி உதவி கோரல் - 2017 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top