ஒரு மாணவனின் ஆரம்பகக்கல்வி என்பது மிகமிக முக்கியமானது.
ஒழுக்கத்துடன்கூடிய கல்வியொன்றுதான் நல்ல பிரஜையை உருவாக்கும். இங்கு
பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் தலைசிறந்து மிளிர்வதற்கு அதுதான் தலையாய
காரணம்.
இவ்வாறு காரைதீவு விபுலானந்த பாலர்பாடசாலையின் 19வது வருட
விபுலவிண்மணிகளின் விடுகைவிழாவில் பிரதம அதிதியாக்கலந்துகொண்டுரையாற்றிய
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
காரைதீவு விபுலானந்தா பாலர் முன்பள்ளிப்பாடசாலையின் 19வது
வருட விபுல விண்மணிகளின் விடுகை விழா காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில்
பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
அன்புகூர் அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
மு.இராஜேஸ்வரனும் ஆளுமைசார் அதிதிகளாக ஸ்ரீல.சு.கட்சி காரைதீவு அமைப்பாளர்
எந்திரி வீ.கிருஸ்ணமூர்த்தி அமைச்சர் தயாகமகேயின் அம்பாறை மாவட்ட
கரையோரப்பிரதேச இணைப்பாளர் வி.வினோகாந்த் தமிழரசுக்கட்சியின்
காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் காரைதீவு மகாசபைத்தலைவர்
சி.நந்தேஸ்வரன் ஆகியோரும் சாதனைசார் அதிதியாக செல்வன் சோமசுந்தரம் வினோஜ்
குமார் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
விபுலானந்தா பாலர் பாடசாலையில் பயின்ற 19புலமையாளர்கள்
பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். கூடவே சாதனை அதிதி சோ.வினோஜ்குமாரும்
பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவும் பொன்னாடை போர்த்தப்பட்டு
கௌரவிக்கப்பட்டார்கள்.
அங்கு இராஜேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்:
மாணவர்கள் பெற்றோரையும் கற்பித்த ஆசிரியர்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது.
எவனொருவன் தனது ஆரம்பக்கல்வி ஆசிரியரை மறக்காமல் நன்றிகூர்கின்றானோ அவன் வாழ்க்கையில் உயர்வடைகின்றான்.
சுவாமி விபுலானந்தரின் நாமத்தோடு கடந்த 19வருட காலமாக
வீறுநடைபோட்டு சமுதாயத்திற்கு நல்ல கல்விமான்களையும் சிறந்த பிரஜைகளையும்
வழங்கிவருகின்றது.
இம்முறை காரைதீவில் புலமைப்பரிசிலில் சித்தியடைந்த 30பேரில் இப்பாடசாலையில் பயின்றவர்கள் 19பேர் என்பது சாதனைக்கும் பெருமைக்குமுரியது.
இதற்கு இங்குள்ள பணிப்பாளர் கல்விமான் சகா மற்றும் நிலாந்தினி ரம்யா ஆகிய ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன்கூடிய தியாகமே காரணமெனலாம்.
இப்பாடசாலை மேலும் முன்னேற எனது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றார்.
நன்றியுரையை பெற்றோர்குழுத்தலைவர் கே.சி.வானந்தம் நிகழ்த்தினார்.




0 comments:
Post a Comment