ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் தொழிநுட்பத்திலான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில் இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும், நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும்,
15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை கோருவோருக்கும் தமது தேசிய அடையாள அட்டை சீர்குலைந்து காணாமல் போனோர் உள்ளிட்டோருக்கு இந்த ஸ்மாட் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ளமுடியும்.
இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை கடந்த ஓக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க என தெரிவித்தார்.

0 comments:
Post a Comment