வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வேறும் கட்சிக்கு ஆதரவளிக்கும் உரிமை கிடையாது.
அவ்வாறு ஆதரவளித்தால் அது கட்சியின் யாப்பிற்கு முரணானது. சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை வகிக்கும் எவரும் வேறும் கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது,
அவ்வாறு ஆதரவளித்தால் அவர்களுக்கு உதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். அது மட்டுமன்றி அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை அல்லது மாகாணசபை உறுப்புரிமையையும் ரத்து செய்ய முடியும்.
எதிர்வரும் தேர்தலின் போது இவ்வாறு கட்சிக்கு விசுவாசமாக செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து அவதானிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சுதந்திரக் கட்சி தேர்தலில் போட்டியிட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment