• Latest News

    December 04, 2017

    இலங்கையில் 191 பேரை காவுகொண்ட இந்தோனேசியா ஹஜ் பயணிகள் விமான விபத்து - இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு

    ந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.

    விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

    1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் அளவில் மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியில் இந்ந சம்பவம் இடம்பெற்றது.

    191 பேரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலை ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ் என்று அழைக்கின்றது.

    இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டனர்.

    அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப்பணிப்பெண்ணின் உடலை அவரின்
    காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் இடம்பெற்றது.

    அத்தோடு விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும்
    இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.


    ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

    விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இலங்கை நாட்டை பொறுத்தவரை வரலாற்றில் இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் 191 பேரை காவுகொண்ட இந்தோனேசியா ஹஜ் பயணிகள் விமான விபத்து - இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top