நல்லாட்சியை கவிழ்த்து காட்டாட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு சிலர் திட்டமிட்டு செயற்படுவதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநித்துவப் படுத்தும் அமைச்சர்கள் வெளியேறப் போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி பன்வில ராஜசிங்க மத்திய கல்லுாரியில் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நேற்றைய தினம் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது.
இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ கணேசன் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியை விமர்சிப்பதற்கு கூட உரிமையுள்ளதாக தெரிவித்தார்.

0 comments:
Post a Comment