பாடசாலை மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் நாற்பது இலட்சம் மாணவ, மாணவியரின் சீருடைகளுக்காக அரசு 2370 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. அதேவேளை, தனியார் பாடசாலை மாணவ, மாணவியரின் சீருடை தேவைக்காக 75 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது. மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் எதிர்வரும் வாரத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
December 01, 2017
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment