- ஊடகப்பிரிவு -
அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இன்று உலகமெங்கணும் கொண்டாடப்படும் மீலாதுந்நபி விழாவுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவும் தவழவேண்டும் என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் அருட்போதனையாகும்.
அண்ணல் நபியின் போதனைப்படி அயராது உழைத்திட நாம் உறுதிபூணுவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் வாழவேண்டும்.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்யவேண்டுமென்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு நமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.
அண்ணலார் போதித்த அன்பு, அமைதி, சமாதானம், சமய நல்லிணக்கம், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றை கடைப்பிடிக்க இந்த புனித நாளில் உறுதி பூணுவோம்.
சமூக ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் வழிசமைத்த பெருமானாரின் சாதனைகள் இன்றைய மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
காலம்காலமாக சமூக ஒற்றுமையை பேணிக்காத்துவரும் முஸ்லிம்களாகிய நாம் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த இந்நன்நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

0 comments:
Post a Comment