காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளமையினால் அதனை அண்டிய பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு லக்சபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெல்கமுவ ஓயா மற்றும் ஹற்றன் ஆறு பெருக்கெடுத்துள்ளது.
இந்நிலையில் காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று(01) நான்கு அடிகள் மாத்திரமே உச்சமட்டதை அடைய உள்ளமையினால் கரையோர மக்களும், காசல்ரீ ஒயா பகுதிகளை சேர்ந்த ஒஸ்போன், நோட்டன், ஆத்தடி, கிளவட்டன், பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment