• Latest News

    December 01, 2017

    மாவட்டங்கள் பலவற்றுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாணதுகம மற்றும் அதனை அண்டிய தாழ்நிலைப் பகுதியில் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலை இருப்பதனால் இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

    நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் யகக்லமுல்ல மற்றும் நாகொட ஆகிய செயலாளர் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட எச்சரிக்கை அல்லது மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பதுளை, பசறை, தளை, எல்கடுவ பிரதேச செயலாளர்பிரிவுக்கும் வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மொனராகலை, வெல்லவாய செயலாளர் பிரிவுக்கும் ஹம்பாந்தோட்டை, கட்டுவன மற்றும் ஒகேவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

    சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்;டாம் கட்டம் அல்லது எம்பர் வர்ண அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படவேண்டும் என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. 

    பதுளை- ஹல்தமுல்லை, இரத்தினபுரி- கொலன்ன, அயகம, பலாங்கொடை, காவத்தை, குருவிட்டை மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காலி மாவட்டத்தில் பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய செயலாளர் பிரிவுக்கும் மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, பிடபெத்தர ஆகிய செயலாளர் பிரிவுகளுக்கும் எம்பர் வர்ணத்தினாலான அனர்த்த எச்சரிக்கையின் இரண்டாம் கட்டம் விடுக்கப்பட்டுள்ளது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாவட்டங்கள் பலவற்றுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top