- யு.எல்.எம். றியாஸ் -
சம்மாந்துறை பிரதேசம் முழுவதும் ஒருநாள் விசேட டெங்கு சிரமதான வேலைத்திட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் வேலைத்திடத்தினை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளம்,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட 7 உயர் நிறுவனங்கள் பொது அமைப்புக்கள் கூட்டாக சம்மாந்துறை பிரதேசம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்ற இவ் வேலைத்திடடத்தின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
அதைனைத் தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு நடைபவனி ஒன்றும் ஹிஜ்ரா சந்தியில் இருந்து பிரதான வீதிவழியாக இடம்பெற்றதுடன் புகை விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது
அதைத் தொடர்ந்து வீடுவீடாக சென்று டெங்கு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட்து.
இச் சிரமதான வேலைத்திடடத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம். ஹனீபா ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



0 comments:
Post a Comment