• Latest News

    January 01, 2018

    மிரட்டுகின்றார் வி.சி.இஸ்மாயில்

    இன்று (01.01.2018) அம்பாரை மொண்டியில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்த சம்மாந்துறையைச் சேர்ந்த வி.சி.இஸ்மாயில் தனக்கு தேசிய பட்டியலில் எம்.பி வேலை தரப்பட வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுனிடம் தமது நெருங்கிய ஆதரவாளர்களைக் கொண்டு கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இக்கோரிக்கையையிட்டு அங்கு வருகை தந்த ஊர்களைச் சேர்ந்தவர்களும், சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களும் எரிச்சல் அடைந்தார்கள். தேர்தல் முடிந்ததன் பின்னர் தரப்படும் என்று கூறியதனை மீண்டும் கேட்பதற்கு தமது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு வருவர் நாகரிகமல்ல என்று பலர் தெரிவித்துள்ளனர்.

    ஏ.சி.இஸ்மாயில்  கூட்ட ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எம்.பிப் பதவியை அடைந்து கொள்வதற்கே ஆட்களை திரட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இவரின் இந்நடவடிக்கைகயால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை ஆதரவாளர்கள் உட்பட பலரும் அதிருப்தி தெரிவிக்கின்றார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மிரட்டுகின்றார் வி.சி.இஸ்மாயில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top