கிறிஸ்துமஸ் மரத்தைக் கடித்து சேதப்படுத்தியதாகக் கூறி அணில் ஒன்றை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்த சீ கிர்ட் (New Jersey- Sea Girt ) நகரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
இங்கு வைக்கப்பட்ட ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் அனைத்தையும், அணில் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.
இதையடுத்து அணில் மீது குற்ற வழக்குப்பதிவு செய்த பொலிசார் அதை கைது செய்து, பின்னர் அணிலை பிணையில் பொலிஸார் விடுவித்தனர்
இந்த தகவலை பொலிஸார் முகநூலில் பதிவிட்டிருந்தனர்.

0 comments:
Post a Comment