• Latest News

    December 06, 2017

    கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை நீர் விநியோகத்தடை !

    கொழும்பு மாவட்டத்தின்  ராஜகிரிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(9.12.2017) அன்று  நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

    புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்விநியோகத் தடை  அமுல்படுத்தப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கி​ழமை அதிகாலை 5 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

    அதற்கமைய ராஜகிரிய, மொரகஸ்முல்ல,  ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான பாதைகள் மற்றும் சிறு வீதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை நீர் விநியோகத்தடை ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top