• Latest News

    December 01, 2017

    ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது

    ரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன், நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம்  படிப்படியாக குறைந்து விடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

    எனினும், நாட்டின் பல பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று திணைக்களம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டு;ள்ளது. 

    வடக்கு, வடமத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் நூறு மில்லி மீற்றலுக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடமபெறும் என்றும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top