• Latest News

    January 12, 2018

    “உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்” - ரீ.எல்.ஜவ்பர்கான்

    - ஊடகப்பிரிவு -

    ர்ஹூம் அஷ்ரபின் குணாம்சங்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் தாங்கள் காண்பதாக காத்தான்குடி நகரசபையின் மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்
    .
    காத்தன்குடி மக்களின் அரசியலையும், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால வளர்ச்சியில் காத்தன்குடியே மையப்புள்ளியாக இருந்தது என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 
    மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் அரசியலை மேற்கொண்டவர்களில், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் நானும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுமே.
    அஷ்ரபின் மடியில் இருந்துகொண்டு அரசியல் பாடம் பெற்றவர்கள் நாங்கள். அவரது அரசியல் பாசறையில் நாங்கள் கற்ற பாடம்தான் இன்று அரசியலில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு காரணமாக அமைகின்றது.
    அஷ்ரபின் துணிவு, தைரியம், சமூகத்தின் மீதான தீராத வெறி, போராட்டக் குணம், அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் தன்மை ஆகியவற்றை நான் ரிஷாட் பதியுதீனில் காண்கின்றேன்.

    மொத்தத்தில் எனது பார்வையில் நான் ரிஷாட் பதியுதீனை அஷ்ரபின் மறுஉருவமாகவே காண்கின்றேன்.

    அஷ்ரபின் மறைவின் பின்னர் பதினேழு வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை வைத்துக்கொண்டு சமூகத்தை ஆண்டவர்கள், நமக்கு உருப்படியாக எதுவுமே செய்யாத நிலையிலேயே மக்கள் புதிய மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்.

    உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை முஸ்லிம் சமூகத்தின் தலைவனாக இனங்காணும் என்பதே எனது நம்பிக்கையாகும். 

        

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்” - ரீ.எல்.ஜவ்பர்கான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top