• Latest News

    March 06, 2018

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் மருதமுனையில் கைது

    கண்டி, திகண, மடவல ஆகிய பிரதேசங்களில் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு, கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (06) மருதமுனையில் பூரண கர்த்தால், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்பன நடைபெற்றன.

    ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் கல் வீச்சுத் தாக்குதலினால் சேதமாக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து, பொலிஸ் மற்றும் இராணுவத்தால் பலர் தாக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிகளும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டதுடன 18பேர் பொலிஸாரால் கைது செய்யப்படதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    தாக்குதல்களுக்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பியத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் மருதமுனையில் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top