சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
உறுப்பினர் ஏ.எம்.நௌசாட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் உறுப்பினர்
உதவி தவிசாளராக வீ.ஜெயச்சந்திரன் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்று
காலை 9 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி ஆணையாளர்
எம்.வை.எம்.சலீம் தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தவிசாளர், உதவி
தவிசாளர் ஆகியோர்களுக்கான தெரிவு நடைபெற்றது.
இதற்காக நடைபெற்ற
வாக்கெடுப்பில் ஏ.எம்.நௌசாட் 12 வாக்குகளையும், வீ.ஜெயச்சந்திரன் 11
வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதே வேளை
தவிசாளர் பதவிக்காக போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்
போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.ஐ.மாஹிர் 8 வாக்குகளைப்
பெற்றுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் சார்பில் 8 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 8
உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் 4
உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment