நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்றாவது தடவையும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வை.எல்.சுலைமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் ஆகியோர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பிற்பகல் 03 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி ஆணையாளர் வை.எல.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் 06 பேரும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 06 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றிருந்தார்கள்.








0 comments:
Post a Comment