• Latest News

    March 07, 2018

    அம்பாரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் பூரண ஹர்த்தால் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    கண்டி மாவட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதனை கண்டித்தும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் இன்று (07.03.2018)  இரண்டாவது நாளாக அம்பாரை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர், கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், இறக்காமம், வரிப்பத்தான்சேனை உள்ளிட்ட பல இடங்களில் இன்று பூரண ஹர்த்தாலல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இந்த ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு – பொத்துவில், அக்கரைப்பற்று – அம்பாரை, கல்முனை – அம்பாரை ஆகிய வீதிகளின் ஊடான போக்குவரத்துக்கள் யாவும் முடங்கியுள்ளன.
    நேற்று முதல் அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் காரியாலயங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், பாடசாலைகள் ஆகியன யாவும் மூடப்பட்டுள்ளன.
    இதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளார்கள்.
    முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடியான சூழலை கருத்திற் கொண்டு பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிராத்தனைகளும் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இதே வேளை, நேற்று கல்முனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட 32 பேர் ரூபா 50 ஆயிரம் சரீரப் பிணையில் பொலிஸாரினால் இன்று அதிகாலை 03.30 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் பூரண ஹர்த்தால் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top