சஹாப்தீன் -
கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கண்டித்தும், நாட்டில் அமைதியை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் இன்று அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களில் ஹர்;த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, மருதமுனை, நிந்தவூர் ஆகிய இடங்களில் இன்று ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், மேற்படி பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் யாவும் மூடுப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் என்பவனவும் மூடப்பட்டுள்ளன.
இன்றைய ஹர்த்தால் காரணமாக கல்முனை – மட்டக்களப்பு, கல்முனை – அக்கரைப்பற்று, கல்முனை – அம்பாரை, அக்கரைப்பற்று – அம்பாரை, அக்கரைப்பற்று – பொத்துவில் ஆகிய வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் யாவும் முடக்கப்பட்டுள்ளன.
இதே வேளை, ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதேசங்களில் பெருமளவில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

0 comments:
Post a Comment