• Latest News

    May 13, 2018

    அக்கறைப்பற்று அபுவக்கர் சித்திக் இஸ்லாமிக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா

    யூ.கே. காலித்தீன் -
    அக்கறைப்பற்று அபுவக்கர் சித்திக் இஸ்லாமிக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா 2018.05.12ம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் அதிபர் அஷ் ஷெய்க் எம்.எம். கலாமுல்லாஹ் ரஸாதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எஸ். முர்சித் முலப்பர் பிரதம அதிதியாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் கலந்து சிறப்பித்தார்.

    நிகழ்வுக்கு ஷேஹ்ஹுல் பலாஹ் அவர்களின் மகனும் தென் இந்தியாவின் அந்-நஜா அரபுக் கல்லூரியின் அதிபருமான  அஷ் ஷெய்க் எம்.ஏ.எம்.ரஹ்மத்துல்லா பலாஹி விஷேட அதிதியாகவும்,  ஜாமியுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் முன்னால் விரிவுரையாளர் அஷ் ஷெய்க் பி.எம்.எம். ஹனிபா (ஆதம் லெவ்வை) ஹஸ்ரத், அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமாவின் அக்கறைப்பற்று கிளையின் தலைவர் அஷ் ஷெய்க்  எம்.எம். அப்துல் லத்திப் வஹ்ஜி, அக்கறைப்பற்று அபுவக்கர் சித்திக் இஸ்லாமிக் கல்லூரியின் காப்பாளரும் முகாமைத்துவ சபையின் தலைவருமான அஷ் ஷெய்க் ஏ.எல்.எம்.அஸ்ரப் சர்க்கி ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் மற்றும் எனைய அரபுக் கல்லூரிகளின் அதிபர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

    இவ் அரபுக் கல்லூரியில் 09பேர் சித்திக்கி பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்கறைப்பற்று அபுவக்கர் சித்திக் இஸ்லாமிக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top