• Latest News

    May 13, 2018

    கல்முனை மாநகர மேயர் ரக்கீப் இந்தக் கடிதத்தை எழுதினாரா?

    கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ. எம். றக்கீப் அவர்களால் எழுதப்பட்டு பெரிய நீலாவணையைச் சேர்ந்த பொதுமகன் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை அண்மையில் முகநூலில் எனக்குப் பார்வையிடக் கிடைத்தது.
    கல்தமுனை மேயரால் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குறித்த கடிதத்தை படித்த போது நான் மிகுந்த வேதனையடைந்தேன். அத்துடன் பொது அரசியலில் ஈடுபட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அதிகாரத்தில் அமரும் போது சட்ட ரீதியாக இவ்வாறானதொரு கடிதத்தை எழுத முடியுமா என்பது குறித்த சந்தேகமும் என்னுள் எழுந்தது.
    கல்முனை மேயர் அவர்கள் சிரேஷ்ட சட்டத்தரணியாவார். இந்த நிலையில், இவ்வாறனதொரு கடிதத்தை ‘மேயர்’ என்ற அந்தஸ்துடன் அவர் பொது மகனுக்கு எழுத முடியுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுந்துள்ளது.
    அந்தக் கடிதத்தில்’தாங்களும் தங்களும் தங்களது குடும்பத்தினரும் தாங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களித்தீர்கள். எனக்கு வாக்களிக்கவில்லை என்பது யாரும் அறிந்ததே. ஆகவே நான் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை தங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்பதனை மிக மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்.
    ‘சந்தர்ப்பம் வரும்போது கவனத்தில் கொள்ளப்படும் என்பதனையும் அறியத் தருகிறேன்’ என அந்தக் கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தக் கடிதத்தில் இறுதியாக அவர் குறிப்பிடும் விடயம் தவறானது அல்ல.. (‘சந்தர்ப்பம் வரும் போது கவனத்தில் கொள்ளப்படும் என்பதனையும் அறியத் தருகிறேன்’) இது சரியானதுதான்.
    ஆனால் ஆரம்பத்தில் அவர் கூறிய விடயங்களே எனக்கு பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
    1.ஒரு கட்சிசார்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மக்கள் பொதுப் பணி என்ற அதிகார அந்தஸ்தையடையும் போது, அவர் தனக்கு வாக்களித்த சாராருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டுமா?
    2.ஏனையோரை அரசியல் ரீதியில் நோக்கி அவர்களுக்கு சேவைகளை வழங்காது அல்லது அவர்களது தேவைகளை நிறைவேற்றாது புறக்கணிப்பது முறையா?
    3.அவ்வாறானதொரு நிலைப்பாடு தனது மனதளவில் இருந்தாலும் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?
    4.இவ்வாறான ஒரு கடிதம் மூலம் ரக்கீப் அவர்களின் மேயர் பதவிக்கான சேவைகளைச் மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கமாட்டார்களா? இந்தக் கடிதமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அந்தக் கட்சித் தலைமைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டாதா?
    இது தொடர்பி ல்கல்முனை மேயருடன் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும். அவர் எனது அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. நான் தொடர்பு கொண்ட வேளைகளில் அவர் வேறு முக்கிய பணிகளில் இருந்திருக்கலாம். அதில் குற்றம் பிடிக்க முடியாது. எப்படியும் அவருடன் தொடர்பு கொண்டு அவரது பதிலை பதிவிட முயற்சிப்பேன்.
    இதேவேளை, இவ்வாறான தொரு கடிதத்தை மேயராகவும் அதேவேளை சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் இருக்கும் நிலையில் ரகீப் எழுதியிருப்பாரா என்பதும் ஒருபக்கச் சந்தேகமாக உள்ளது.-
    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
    From Face Book 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர மேயர் ரக்கீப் இந்தக் கடிதத்தை எழுதினாரா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top