(றியாஸ் இஸ்மாயில்)
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின்
ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக
அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.நடைமுறைப்படுத்து ம் தலைமைத்துவச்
செயலமர்வும் கல்விக்கருத்தரங்கும் (16.05.2018) ழுமுநாள்
அட்டாளைச்சேனை ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் அட்டாளைச்சேனை
வை.எம்.எம்.ஏ.இன் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் இதன்
ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச
சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் பிரதம அதிதியாகவும் அட்டாளைச்சேனை
வை.எம்.எம்.ஏ.இன் போசகரும் பிரதேச சபை உறுப்பினருமான சமூகநேயன் தமீம்
ஆப்தீன் கெரளவ அதிதியாகவும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய
உதவிச் செயலாளர் எம்.ஐ.உதுமாலெப்பை விசேட அதிதியாகவும் அட்டாளைச்சேனை
வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஆரம்பகாலச் செயலாளர் வை.எல்.எம்.இப்றாஹிம் ஜே.பி
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சீ.உவைத்துல்லா ,அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.இன்
பொருளாளர் பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம் ஆலம்குளப் பொறுப்பாளர் ஏ.எம்.ஜெமீல்
கல்வித்தவிசாளர் ஏ.எம்.நௌசாத் இணைப்பாளர்களான ஜே.ஆர்சாத் ஏ.எச்.றிசாட்
எனப் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களுக்கான
தலைமைத்துவச் செயலமர்வு நடைபெற்றதுடன் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம்
பாடங்களுக்கான கருத்தரங்குகளை ஆசிரியர்களான ஏ.ஆர்.எம்.ஆசீக் மற்றும்
எம்.எஸ்.எம்.பாஹீம் ஆகியோர் மேற்கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அதிதிகளால் றஹ்மானியா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சீ.உவைத்துல்லாவின் பணி பாராட்டத்தக்கது கூறினர்.
இதில் தரம் 10 தரம் 11 மாணவர்கள் கலந்து கொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வருகை தந்த அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.






0 comments:
Post a Comment