• Latest News

    December 08, 2018

    படையினர் வசமுள்ள 13.25 ஏக்கர் விடுவிப்பு

    திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள 13.25 ஏக்கர் காணி நாளை மறுதினம் (10) விடுவிக்கப்படவுள்ளது.

    திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த காணிகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
    காணிகளை அதன் உரிமையாளர்களிடமே கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

    கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் இதுவரையில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தவிர தனியாருக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அந்த காணிகளையும் மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் குறிப்பிட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: படையினர் வசமுள்ள 13.25 ஏக்கர் விடுவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top