• Latest News

    December 08, 2018

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த வாரத்தில் பெறுபேறுகள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சு மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் என பரீ்டசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

    அதேநேரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு 20,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top