ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கல் மீது
முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரை அதுகுறித்து தீர்ப்பு
வழங்குவதை உயர்நீதிமன்றம் திகதி நிர்ணயமின்றி ஒத்திவைத்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற கலைப்புக்கான அதிவிசேட வர்த்தமானி மீது
விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவும் தீர்ப்பு வழங்கப்படும் வரை
திகதி நிர்ணயமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதம நீதியரசர் நலின்
பெரேரா தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் ஏழு பேரடங்கிய நீதியரசர்கள் குழாம்
இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை ஆட்சேபித்து ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
0 comments:
Post a Comment