நிலவும் அதிக மழையுடனான வானிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் பொழுது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு, அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.
வேகத்தை மணிக்கு 60 கிலோமீற்றரை விட அதிகரிக்க வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது நிலவிவரும் பனிமூட்டத்தின் காரணமாக, வாகனங்களை மிகவும் அவதானத்துடன் செலுத்துமாறும் பொலிஸாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment