யூ கே. காலித்தீன் -
எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினால்வாழ்த்துச் செய்தி வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.
நம் தாய் நாட்டுக்கு இந்த சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ தலைவர்கள் ஒன்றிணைந்து இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியாக உணர்வோடு ஒற்றுமையாக செயற்பட்டதைப் போன்று இக்கால தலைவர்களும் ஒன்றிணைந்து தமது சமூகத்திற்காகவும்,
செயற்பட வேண்டுமெனவும் தனது வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதே நேரம் எமது முன்னோர்கள் இன, மத, பேதங்களை களைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதைப் போன்று நாமும் இன, மத மற்றும் அரசியலிற்கு அப்பாற் சென்று தாய் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட முன் வர வேண்டும் என நாட்டின் அனைத்து மக்களிடத்திலும்
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை கேட்டுக் கொள்கிறது.
குறிப்பாக முஸ்லிம்கள் எமது தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எமது முன்னோர்களைப் போன்று முன்மாதிரிகளை கடைபிடித்து நாட்டிற்காக தம்மை அர்பணிப்பவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனவும் இவ்வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே இந்நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் அனைத்து இன மக்களும் ஒரு தாய் பிள்ளை போல் வாழ வாழ்த்துகின்றோம் .
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை
0 comments:
Post a Comment