• Latest News

    February 05, 2019

    நாட்டின் சுதந்திரத்துக்கும், தனிநபர் சுதந்திரத்துக்கும், கௌரவத்துக்கும் இடையூறாக இருந்துவிடக்கூடாது - வர்த்தக சங்கத்தலைவர் முபாறக்

    எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்-

    இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கு, நமது சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் பங்களிப்பு வழங்கினர். இம்மூவின மக்களின் தலைவர்கள், தமது பொது எதிரியாக ஆங்கிலேயர்களை இனங் கண்டு, சாதி, மத பேதங்களின்றி ஒன்றுபட்டு அவர்களுக்கெதிராகப் போராட்டம் நடாத்தி வெற்றிபெற்றனர்.
    இவ்வாறு சகல இனத்தவர்களும் அன்று ஒன்றுபட்டு போராடிப் பெற்ற இந்த சுதந்திரத்தை அவ்வாறே நாமும் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
    நாம் எம்மை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று நினைப்பதற்கு முன்னர், நாம் எல்லோரும் எம்மை, "இலங்கையர்கள்" என்று நினைப்பது எமது கடமையாகும். இதுபோன்றே நாம் பெற்ற சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் தனிநபர் சுதந்திரத்துக்கும் கௌரவத்துக்கும் இடையூறாக இருந்துவிடக்கூடாது. என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் தெரிவித்தார்.
    இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினதை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு வர்த்தக சங்கத்தின் தலைவர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் தலைமையில் சங்கத்தின் செயலக முற்றலில் இடம்பெற்றது.
    இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம்,அபிவிருத்தி மூல உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ,கல்முனைப் பிராந்திய இராணுவ கட்டளையிடும் அதிகாரி மேஜர் தர்மசேன,ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.அப்துல் ரஸ்ஸாக் உள்ளிட்டவர்களும் சங்கத்தின் உயர்சபை உறுப்பினர்கள் உலமாக்கள் மகாராசா மாணவர்கள் உள்ளிட்டவர்களும் கொட்டும் மழையையும் போருட்ப்படுத்தாது கலந்துகொண்டிருந்தனர்.
    இங்கு தொடர்ந்து உரையாற்றிய முபாறக்,
    காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்று 71 வருடங்கள் பூர்த்தியாகின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர தினத்தையே இன்று நாம் மிகுந்த கௌரவத்துடனும் அபிமானத்துடனும்; நினைவு கூருகின்றோம்.
    நாம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடும் பிரதான நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாமும் நம் மாதாவின் விடுதலையை கொண்டாடிக்கொடிருக்கின்றோம்.
    கடந்த 70 ஆவது சுதந்திர தினத்தை நமது சாய்ந்தமருதில் மிகக்கோலாகலமாக கொண்டாடினோம். அதற்கு முக்கிய பிரமுகர்களை வரவழைத்துக் கொண்டாடினோம். அது எங்கள் அனைவருக்கும் மறக்கமுடியாத நிகழ்வுகள் என்றால் மிகையாகாது.
    எங்களது சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம், நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் விதத்தில் இன்றைய சுதந்திர தினத்தைக்கொண்டாடுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், எங்களை நாங்களே ஆளவேண்டும் என்ற ஆதங்கத்தில் இருக்கும் சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளுராட்சிமன்றம் என்ற நீண்டகால கோரிக்கை, இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் தருகின்றது.
    இன்றைய முக்கிய தினத்தில் அரசாங்கத்திடமும் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளிடமும் மிகுந்த வினயமாகக் நாங்கள் கேட்டுக்கொள்வது எங்களது ஊர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றித்தாருங்கள் என்பதுதான். எங்களது மக்கள் ஒன்றுபட்டுப்போராடுவது எந்த கட்சிகளுக்கோ அல்லது அரசியவாதிகளுக்கோ எதிராக அல்ல நாங்கள் எங்களது நியாயங்களை அடைந்துகொள்ளவே என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே நாங்கள் தயவுடன் மீண்டும் கேட்டுக்கொள்வது எங்களது சுதந்திரத்தைத் தாருங்கள் உங்களை தோளில் சுமக்கிறோம்.
    பல தியாகங்களுக்கு மத்தியில் நாடு சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் நிறைவடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சிலர், தாங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களது சுதந்திரத்தின் மீதும் அவர்களது கௌரவத்துக்கு எதிராகவும் கல் ஏறிய முற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
    வர்த்தகத்தில் அடிமட்டத்திலிருந்து, ஓரளவு முன்னோக்கிச்செல்லும் என்மீதும் எனது வர்த்தக நிறுவனத்தின்மீதும் பொறாமைகொண்டு, எனது முன்னேற்றத்தை தடுக்கும் விதத்தில் சிலர் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களது கனவை அடைந்துகொள்ள முற்படுகின்றனர். அவர்களது எண்ணம் நிறைவேறப்போவதில்லை அவர்கள் கூறுவதுபோல் நான் வளக்கப்பட்டவனுமில்லை.என்பதை எனக்கு எதிராக போலிப்பிரச்சாரங்களை மேற்கொவோர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
    நம் தாய்த்திருனாட்டின் சுதந்திர தினத்தில் வர்த்தகர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் எதிர்ப்புக்களை சவால்களாக எடுத்துக்கொண்டு இஹ்லாசான முறையில் வர்த்தகம் செய்து முன்னேறுங்கள் என்பதே.
    இன்று எமது புதிய தேசத்தின் உதய நாள், உதய தேசத்தின் ஆரம்ப நாள். இன்று 71 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இன மத பேதங்களை மறந்து "நாம் இலங்கையர்கள்" என்று கூற அனைவரும் ஒன்றுபடுவோமாக. அத்துடன், நாட்டுப்பற்றுடனும், சமூக நல்லிணக்கத்துடனும் இன்றைய சுதந்திர தினத்தைக் கொண்டாடி தேசப்பற்றை வளர்ப்போமாக என்றும் கூறி முடித்தார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டின் சுதந்திரத்துக்கும், தனிநபர் சுதந்திரத்துக்கும், கௌரவத்துக்கும் இடையூறாக இருந்துவிடக்கூடாது - வர்த்தக சங்கத்தலைவர் முபாறக் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top