• Latest News

    February 05, 2019

    வரவு செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்தது

    வரவு செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

    2019ம் ஆண்டுக்கென தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மொத்தச் செலவாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் நிதி ஒதுக்கீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நாடாளுமன்ற சம்பிரதாயம் ஆகும். 

    இதனிடையே இன்றைய தினத்தில், நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலில் 15 கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பிலும், மீதொட்டமுல்ல குப்பைமேடு, இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 

    இதேவேளை, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இந்த வாரத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யோசனை சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்டபட்டமை குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரவு செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top