நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச்சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
இச்சம்பவம் நேற்று இரவு 7.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதில் 6 ஆண்கள்6 சிறுவர்கள் 3 பெண்கள் உள்ளடங்குகின்றனர் கொல்லப்பட்ட அனைவரும் காத்தான்குடியைச்சேர்ந்தவர்களா வர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கு வாடகைக்கு வந்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட இப்பிரதேச வாசிகளில் சிலர் உட்பட இப்பிரிவிற்குப்பொறுப்பான கிராம உத்தியோகத்தர் சகிதம் அந்த வீட்டைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போதே தற்கொலையாளி தன்னைத்தானே சுட்டுக்கொண்டதையடுத்து அந்த வீட்டிலிருந்த ஏனையோரும் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்தனர்.
இதே வேளை வெடிச்சம்பவம் இடம் பெற்ற போது இவ்வீதியால் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணும் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு பொலிஸார் கோரிய போது முச்சக்கர வண்டியை நிறுத்ததாலேயே பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளதாலேயே இச்சமபவம் இடம் பெற்றுள்ளது.இசம்பவத்தினால் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடந்துள்ளன இதே வேளை இக்கிராம வாசிகள் சகலரும் இங்குகிருந்து வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடை பெறுகினறது.




0 comments:
Post a Comment