• Latest News

    April 26, 2019

    இலங்கையில் உடனடியாக அமலுக்குவரும் வகையில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை

    இலங்கையில் உடனடியாக அமலுக்குவரும் வகையில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிவில் விமான சேவை அதிகார சபை இந்த அறிவுறுத்தலை இன்று  (வியாழக்கிழமை) விடுத்துள்ளது.
    இந்த நிலையில், இலங்கையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் உடன் அமலுக்குவரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
    இதன்படி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஆளில்லா விமானங்கள் பறக்கவிடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சிவில் விமான சேவை அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

    இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த தாக்குதலை அடுத்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது.
    முதலில் நாட்டில் நிலவிய அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
    பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) ஒருமனதாக அனுமதி வழங்கியது.
    BBC tamil
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் உடனடியாக அமலுக்குவரும் வகையில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top