இலவங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்புகள் உள்ளதா? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுவதை அறிந்து கொண்டு இந்த தாக்குதல் இம்பெற்றுள்ளனவா என்ற கேள்விக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசியல் அமைப்பின் ஒன்றின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்
இப்போது மஹிந்தராஜபக்ஷ அணியினர் இந்த சம்பவங்களைப் பயன்படுத்தி அதிகாரத்தை மட்டும் கைப்பற்ற நினைக்கின்றீர். அவ்வாறு இருக்காது. முதலில் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர வேண்டும். என்று அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment