நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீனின் ரூபா 60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையின் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (20) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கப்பல் துறை, துறைமுகங்கள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொள்வதோடு, கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ரீ.ஏ. நிஸாமும், விஷேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் ஆகியோர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
மேலும், நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்
-ஊடகப் பிரிவு -
0 comments:
Post a Comment