இனவாதிகளின் இலக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆக இருப்பதற்கான காரணங்களை பட்டியல் படுத்திப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
இந்தக் காரணங்களே அவர்களின் கண்களை கரிக்கக் கூடும் என்பதே என் ஊகம்.
1) குறுகிய காலத்தில் மக்கள் மனங்களில் இடம் பிடித்த மக்கள் சேவகன் றிசாட் பதியுதீன்.
2) மிகச்சிறிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை தோற்றி 5 பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பல பிரதேசசபை உறுப்பினர்கள் அடங்கிய கட்சியின் தலைமைத்துவம்.
3) ஒக்டோபர் 26 . 52 நாள் ஆட்சிமாற்றத்தின் சூத்திரதாரிகளை வீழ்த்தி ஆட்சியை தீர்மானித்த சக்தி.
4) 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப முதலில் வெளியேறியமை.
5) சிறிய வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். ஒரே அமைச்சு தொடர்ந்தும் அவர் வசம் இருந்தமை மற்றும் ஐந்து அமைச்சுக்களின் பொறுப்புதாரி.
6) இதுவரைகாலமும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுள்ள சபைகளை பிரதினிதித்துவப்படுத்தி வந்த போதிலும் அமைச்சர் றிசாட் தனது கட்சியினூடாக தமிழர்கள் சபையையும் பிரதினிதித்துவப் படுத்துகின்றமை.
7) தனது அமைச்சின் ஊடாக வாழ்வாதார உதவிகளை மூவின மக்களுக்கும் வழங்கி வருகின்றமை. மற்றும் செயல் திறனான சேவை.
8 ) றிசாட் பதியுதீன் அமைச்சின் கீழ் அதிகமான திணைக்களங்கள் வருகின்றமையும், அதில் அதிக முஸ்லிம்கள் திணைக்களத்தலைவர்களாக உள்வாங்கப்படுகின்றமையும்.
9) பெரும்பான்மை அமைச்சர்களுக்கு முடியாமல் போன சதோச கட்டுமானத்தை மொடல் ஆக்கி வினைத்திறனாக்கியமை.
10) வடக்கோடு மாத்திரம் நின்றுவிடாமல் கிழக்கிலும் தடம்பதித்து தனது ஆளுகையை நிறுவியமை.
11) எதிர்காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கப்போகும் சிறுபான்மையினரின் பலம் பொருந்திய ஆலவிருட்சம்.
12) கலவரகாலங்களில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைகின்றமை. மற்றும் அது தொடர்பில் அழுத்தம் பிரயோகித்தல் .
13) 2000 க்கு பிற்பட்ட காலங்களில் பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்ட கடின உழைப்புடன் கூடிய முஸ்லிம் தலைமைத்துவம்.
14) அவர்கள் எதிர்பார்க்கும் வம்புதும்புகள் , சிக்கல்களில் சிக்கவைக்கமுடியா தலைமை.
இத்தகைய இன்னோரன்ன காரணங்களின் வெளிப்பாடே அமைச்சர் றிசாட் பதியுதீனை அரசியலில் இருந்தும் ஓரங்கட்டவேண்டும் என்ற கங்கணத்தின் வெளிப்பாட்டுத்தன்மையாகவுள்ளது. ஆகவேதான் எங்கெங்கெல்லாம் அடித்துப் பார்க்கமுடியுமோ அங்கங்கெல்லாம் அடித்துப்பார்கிறார்கள்.
இவர்களின் இந்த நடந்தையின் வெளிப்பாடு இன்னும் இன்னும் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மவுசை சிறுபான்மையினர் மத்தியில் அதிகரிக்கப்போகின்றதே அன்றி குறைக்கப்போவதில்லை.
ஷிபான் BM
மருதமுனை.

0 comments:
Post a Comment