• Latest News

    September 19, 2019

    பல்கேரியாவில் திருமணச் சந்தை! 18 முதல் 20 வயதினர் பங்கேற்பு

    திருமணம் செய்து கொள்வதற்காகவே பல்கேரியாவில் ஜிப்ஸி இன மக்கள் நிகழ்த்தும் அற்புத சந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜிப்ஸி இன மக்களை பொறுத்தவரையில் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவேளை 20 வயதைக் கடந்து விட்டால் அவர்கள் திருமண வயதை கடந்து விட்டார்கள் என்ற பார்வையில் பார்ப்பார்கள்.
    இந்த நிலையில் மிகவும் வறுமையுடன் இருக்கக்கூடிய ஜிப்ஸி இன மக்கள் கூட்டாக இணைந்து திருமண சந்தையை நடத்துகின்றனர்.
    இந்த நிகழ்வு பல்கேரியாவின் மோகிலா என்ற கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த கிராமத்தில் உள்ள குதிரை சந்தை மைதானத்தில் தான் திருமண சந்தையை நடத்துகின்றனர்.
    இந்த சந்தையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உணவு கடைகளும் இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் வயதினர் அதாவது ஆண்கள் பெண்கள் என அனைவரும் இந்த சந்தையின் போது கலந்து கொள்வார்கள்.
    இதில் தனக்கு பிடித்த பெண்ணுடனும் தனக்கு பிடித்த ஆணுடனும் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். இவர்களுக்கு பிடித்திருந்தால் அங்கேயே திருமணம் குறித்து பேசுவார்கள். மேலும் பெண் வீட்டாரின் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்கள்.மேலும் வரதட்சணை என்ற ஒன்று அவர்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால் இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆண்மகன் தான் பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.
    ஒரு குறிப்பிட்ட பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் அதற்கேற்றவாறு வரதட்சணை மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
    இதில் கடைசியாக யார் அதிகமாக வரதட்சணை கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெண்ணின் பெற்றோர்கள் ஒத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பல்கேரியாவில் திருமணச் சந்தை! 18 முதல் 20 வயதினர் பங்கேற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top