அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதிப் போட்டியில்
அமெரிக்காவின் செரீனா வில்லியமை தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்
கனடாவின் பியான்கா.
பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில்
நட்சத்திர விராங்கனை செரீனா வில்லியம்ஸ், 20 வயதேயான இளம் விராங்கனையும்
தரநிலையில் 15 ஆம் இடத்தில் இருப்பவருமான பியான்காவை எதிர்கொண்டார்.
அமெரிக்க
ஒபன் பட்டத்தை வென்று டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்லாம்களை
வென்றவரின் சாதனையை செரீனா சமன் செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில்,
6-3 மற்றும் 7- 5 என்ற செட் கணக்கில் பியான்காவிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் செரீனா.
துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், கனேடிய விராங்கனை பியான்காவின் கை ஓங்கியிருந்தது.
37 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment