018 – 2019 ஆண்டுக்கான சொத்துப் பொறுப்பு விபரங்களை வெளிப்படுத்தாத
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 8 பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல்
விசாரணை ஆணைக்குழுவில் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா
நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.
அதற்கமைய, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான நவீன்
திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகில
விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க மற்றும்
சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக
அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதிவரையில், 2018/19 ஆண்டுக்கான தமது
சொத்து, பொறுப்புகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் எனவும், சொத்து,
பொறுப்பு வெளிப்படுத்தல் சட்டத்தில் 4 (ஏ)(2) பிரிவுக்கமைய,
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு
வெளிப்படுத்தல்களை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
எனினும், ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா
நிறுவனதினரால் கடந்த ஜூலை 30 ஆம் திகதிவரை தமது சொத்து, பொறுப்பு
விபரங்களை ஒப்படைத்திராக அமைச்சரவை அமைச்சர்களின் விபரத்தைக்
கோரி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு
தகவலறியவும் விண்ணப்பமொன்றை முன்வைத்திருந்தது.
இந்த சொத்து, பொறுப்பு விபரங்களை வெளிப்படுத்தாக
குற்றத்துக்காக ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் மற்றும் ஒரு
வருட சிறைத்தண்டனை பெறக்கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பதிலளித்த ஜனாதிபதி செயலகம், கடந்த ஆகஸ்ட் 20 ஆம்
திகதிவரையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 8 அமைச்சர்கள் தமது சொத்து
பொறுப்பு வெளிப்படுத்தல்களை முன்வைக்கவில்லை என
தெரிவித்திருந்தது.
அதன்பிரகாரமே, குறித்த அமைச்சர்களுக்கு எதிராக ட்ரான்ஸ்பெரன்ஸி
இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை
ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது.
metro News -
0 comments:
Post a Comment