சேவலொன்று கூவுவதால் அயலவர்களின் நித்திரை குழம்புவதாக
தெரிவித்து நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் சேவலுக்கு ஆதரவாக
பிரான்ஸ் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
மோரிஸ் எனும் இச்சேவலை கொரின் பெசியு என்பவர் வளர்த்து வருகிறார்.
இந்த சேவல் அதிகாலையில் உரத்து கூவுவதால் அயலில் உள்ளவர்களின்
உறக்கம் குழம்புவதாக வழக்குத் தொடுக்கப்பட்டது.உல்லாச
விடுதியொன்றின் நிர்வாகத்தால் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு தாம் விழித்தெழ வேண்டியிருப்பதாக ஓய்வு பெற்ற
விவசாயியான ஜீன் லூயிஸ் பைரோனும், அவரின் மனைவி ஜோலியும்
தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணை ஆரம்பமாகியபோது, பிரான்ஸின்
கிராமிய பாரம்பரியங்களைப் பேண விரும்பும் மக்கள் மேற்படி சேவலுக்கு
ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இச் சேவலைக் காப்பாற்றுமாறு கோரும் மனுவில் 140,000 பேர்
கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த சேவல் அங்கு தொடர்ந்தும்
இருக்கலாம் என கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
அத்துடன் வழக்குத் தொடுத்தவர்களால் சேவலின் உரிமையாளர்களுக்கு
1000 யூரோ (சுமார் 2 இலட்சம் இலங்கை ரூபா) செலுத்த வேண்டும் எனவும்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மெட்ரோநியூஸ் -
0 comments:
Post a Comment