• Latest News

    September 10, 2019

    ரூபா 55 ஆயிரத்திற்கு ஜீப் வண்டி! ஆச்சாியமா... வாசியுங்கள்

    ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை உருவாக்கியுள்ளார் வாகன திருத்துனர் ஒருவர். இதற்காக வெறும் 55,000 ரூபாயையே அவர் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார என்பவரே இதை உருவாக்கியுள்ளார். வாகன திருத்துனராகவும், மேசனாகவும் தொழில் செய்யும் அவர், தனது ஓய்வு நேரங்களில் இந்த ஜீப்பை உருவாக்கியுள்ளார்.மோட்டார் சைக்கிள் இயந்திரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஜீப்பில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியது.
    சிறுவயதிலிருந்தே ஆட்டோ மொபைல் துறையில் ஆர்வம் கொண்ட அவர், ஏற்கனவே இரண்டு பேர் பயணிக்கக்கூடிய ஜீப், சிறிய ஹெலிகொப்டர் ஆகியவற்றைத் தயாரித்துள்ளார்.எனினும், அரசுத்துறைகளில் இருந்து தனக்கு ஊக்கமோ உதவியோ கிடைக்கவில்லையெனத் தெரிவித்துள்ள அவர், தனியார் அல்லது அரசு நிறுவனம் தனக்கு உதவி செய்தால், இதுபோன்ற பல ஜீப்புகளை சந்தைக்கு தயாரிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரூபா 55 ஆயிரத்திற்கு ஜீப் வண்டி! ஆச்சாியமா... வாசியுங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top