வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் பெயரில் சமர்ப்பிக்கப்படும் போலி ஆவணங்களுக்கு ஏமாற்றப்பட வேண்டாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில்
பணி செய்யும் இலங்கையர்களுக்கு வரி சலுகையின் கீழ் வாகனம் பெற்றுக்
கொள்வதற்காக அனுமதி பத்திரம் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்காக
நிதி அமைச்சின் வர்த்தக கொள்கை திணைக்கள ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களை
போலியான பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தயாரிக்கப்பட்ட போலி கடிதங்கள்
புலம்பெயர்ந்தோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென நிதி
அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கடிதங்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும், ஏனைய பல்வேறு
முறைகளிலும் பகிரப்படும் மோசடி நடவடிக்கையால் ஏமாற வேண்டாம் என நிதி
அமைச்சு கேட்டுள்ளது.
வெளிநாடுளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு
தீரவை வரியற்ற வாகனம் வழங்குவதற்காக அனுமதி பத்திரம் வெளியிடும் யோசனை நிதி
அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியாகிய தகவல்கள் அனைத்தும் போலியானதென நிதி அமைச்சு
கூறியுள்ளது.
0 comments:
Post a Comment