• Latest News

    September 18, 2019

    நிந்தவூர் பிரதேச சபையின் அதிரடி அறிவித்தல் தவறினால் உடன் சட்ட நடவடிக்கை.

    நிந்தவூர் மாந்தோட்ட சந்தியிலும், அலியான் சந்தியிலும், நிந்தவூர் பிரதான வீதியிலும் அனுமதியற்ற முறையில் நடைபெறும் அங்காடி வியாபார நடவடிக்கைகளினால் இவ்வீதிகளினால் பயணிக்கும் பொது மக்களும், பயணிகளும் தொடர்ந்து அசௌகரிய நிலைக்கு ஆளாவதாக பிரதேச சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளதன.

     இதனால் பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வியாபார நடவடிக்கைகளை எதிர்வரும் 2019-09-20 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நிறுத்தி,  நிந்தவூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள பொதுச் சந்தையில் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச சபையினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் வியாபாரிகள் இவ் அறிவித்தலுக்கமைய தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவறும் பட்சத்தில் அங்காடி வியாபார நடவடிக்கைக்குரிய தற்காலிக அமைவிடம் மற்றும் தளபாடங்கள் ஏனைய வியாபாரப் பொருட்கள் அனைத்தும் பிரதேச சபைக்குரித்தான 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தின் 96, 97(1)  59(1) உப பிரிவின் பிரகாரம் அகற்றுவதோடு, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக நீதிவான் நீதி மன்றில் வழக்கு தொடரப்படுமெனவும் பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தகவல் : முஹம்மட் ஜெலீல்,
    நிந்தவூர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சபையின் அதிரடி அறிவித்தல் தவறினால் உடன் சட்ட நடவடிக்கை. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top