• Latest News

    September 22, 2019

    காதலித்து பார் (கவிதை)

    காதலித்து பார் 💚💚💚
    ஒரு இரும்பிற்குள்
    வேர்விட்டு நீயெப்போதும்
    பூத்து கிடப்பாய் ...
    கண்ணாடி பிம்பத்தில்
    நீ கவிதையின்
    பிரம்மனாக தென்படுவாய் ...
    பனியின் துளி
    ஒரு மலையின் கனமென கணந்தோறும் உணர்வாய் ...
    சிலுவையை சுமந்திட
    அத்தனை
    விருப்பம் கொள்வாய் ...
    மூச்சுக்காற்றுக்கும்
    இதய துடிப்பிற்கும்
    வேறுபாடு ஆயிரம் காண்பாய் ...
    கைகள் நீட்டும்
    யாசகக்காரனை
    மிக நேர்த்தியாக ரசிப்பாய் ...
    வழிதவறிய
    ஒரு ஆட்டுக்குட்டியின்
    பரிதவிப்புற்குள்
    நீயெப்போதும் சிக்கிக்கிடப்பாய் ...
    எது ஆதி பிரபஞ்சம்
    எது மீதி பிரபஞ்சம்
    உன் தேடல் சிறகு விரிக்கும் ...
    மழை
    வெயில்
    பனி
    காற்று
    நெருப்பு
    இதில் ஏதோவொன்று
    உன்னை ஈர்த்துக் கொண்டே
    இருக்கும் ...
    உன்னை சுமந்தபடி சாலைகளில்
    நகரும் நகரப்பேருந்து
    சொர்க்கத்தின்
    ரதமென தோன்றும் ...
    தென்றல்
    உன் தேகம் கீறும்
    புயல் உன் காயம் ஆற்றும்
    வித்யாசத்தினை உணர்வாய் ...
    அடிக்கடி நகம்கடித்து
    கடிகாரத்தினை
    திட்டிக் கொள்வாய் ...
    நீயென்பது
    நீதானா என
    அடிக்கடி சோதித்துக் கொள்வாய் ...
    காதலித்து_பார்
    ஒரு இரும்பிற்குள்
    வேர்விட்டு நீயெப்போதும்
    பூத்து கிடப்பாய் 💚💚💚

    - கதிர் அவன்-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காதலித்து பார் (கவிதை) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top