• Latest News

    September 22, 2019

    வேட்பாளர் தொிவில் ரணிலும், சஜித்தும் இணக்கம் - சபாநாயகர் கரு ஜயசூரிய மத்தியஸ்தம்

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றறம் காணப்பட்டுள்ளது.

    சபாநாயகர் கரு ஜயசூரியவின் மத்தியஸ்தம் ஊடாக ரணில் மற்றும் சஜித் இருவரும் இன்று பிற்பகலில் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையின் போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் அதிகாரத்தை செயற்குழுவிடம் வழங்குவது என்றும் செயற்குழுவுக்கு புதிதாக உறுப்பினர்களை நியமிக்கக்கூடாது என்றும் இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

    அதன் பிரகாரம் எதிர்வரும் புதன் கிழமை கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
    இந்த விடயம் தொடர்பாக நாளையும் சந்தித்துப் பேச ரணில் மற்றும் சஜித் இருவரும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வேட்பாளர் தொிவில் ரணிலும், சஜித்தும் இணக்கம் - சபாநாயகர் கரு ஜயசூரிய மத்தியஸ்தம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top