ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள திகதி மற்றும் வேட்புமனுத் தாக்கல்
செய்யப்படும் கால எல்லை அடங்கிய சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அடுத்த 10
நாட்களுக்குள் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ள திகதி மற்றும் வேட்புமனுக்கள் கோரப்படும் அறிவிப்பு என்பன ஒரு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்.
இந்த அரசிதழ் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டு, 16 தொடக்கம் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒரு
பௌர்ணமி விடுமுறை நாளிலோ அல்லது அரசாங்க விடுமுறை நாளிலோ வேட்புமனுவை
ஏற்றுக் கொள்ளவோ, தேர்தலை நடத்தவோ முடியாது என ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில்
கூறப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் முதல் 4
தொடக்கம் 6 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில்
கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான திகதி ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் என்று அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment