• Latest News

    September 16, 2019

    எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 40 வீதம் வாக்குகளை பெற முடியாது - ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன

    எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பலத்தினை பெற மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
    நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்கு அமைய எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 40 வீதம் வாக்குகளை பெற முடியாதென தெரியவந்துள்ளது.
    இந்நிலையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமால் அது சாத்தியப்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
    சமகாலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலுக்காக தூதரக அலுவலகங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கின்றன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கலந்துரையாடவில்லை.
    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நீடிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சபாநாயகரிடம் வழங்கிய கடிதமே காரணம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
    சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 40 வீதம் வாக்குகளை பெற முடியாது - ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top