பலாலி விமான நிலையத்தின் பெயரை யாழ்ப்பாணம் விமானம் நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.
விரைவில் பலாலி விமான
நிலையத்தில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனால் விமான நிலையத்தின் பெயரை யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருந்து
தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச்
சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான
பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை
கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த
சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை
உறுதிப்படுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும்
இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு
இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment